Govindharaja perumal Urchavam

தில்லை கோவிந்தராஜ பெருமாள் மாசி மக உற்சவம் மற்றும் திருக்கல்யாண வைபவங்கள்

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாசி மக தீர்த்தவாரி மகோற்சவம் இந்த வருடமும் சீரும் சிறப்புமாக சிறிய மாற்றங்களுடன் நடந்தேறியது .

     அதாவது ஆண்டுதோறும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிதம்பரத்திலிருந்து, புறப்பட்டு கிள்ளையை வந்தடைந்து, அங்கு மாசி மக தீர்த்தவாரி முடித்துவிட்டு, அங்கிருந்து புவனகிரி ஸ்ரீ ராமானுஜ கூடத்திற்கு எழுந்தருளி சேவை சாதிப்பார். அங்கு மண்டகப்படி உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு கொரானா நோய்  தாக்கத்தின் காரணமாக, பாதுகாப்பைக் கருதி, பெருமாள் கிள்ளையில் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளாமல் சிதம்பரம் மேல ரத வீதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலுக்கு எழுந்தருளி, அங்கு தீர்த்தவாரியும் மாசி மக உற்சவங்களையும் மேற்கொண்டார்.

     தில்லை கோவிந்தராஜ பெருமாள் 26.2.2021 அன்று ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலுக்கு எழுந்தருளினார். மறுநாள் 27.2.2021 புவனகிரி ஸ்ரீ நன்னைய ராமானுஜர் கூடத்தின் உபயமாக காலை விசேஷ திரு மஞ்சனமும் அலங்காரமும் அதனைத் தொடர்ந்து சாற்றுமுறை தீர்த்த பிரசாத  விநியோகமும் நடைபெற்றது

     தொடர்ந்து அன்று மாலை 4 மணி அளவில் ஆலய தரிசனம் அறக்கட்டளை சார்பாக ஸ்ரீதேவி, பூதேவி, தாயார் சமேத ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. மிகச்சிறப்பாக இவ்வைபவம் நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் விழா நிறைவு பெற்றது. திருக்கல்யாணம் முடிந்தபின் வந்திருந்த பக்தர்கள் அனை வருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருக்கல்யாண உற்சவத்தை சித்ரகூடம் சுவாமி ஸ்ரீ உ.வே.ஏ.வி ரங்காசாரியார் அவர்கள் தலைமை தாங்கி  நடத்தி வைத்தார்கள். இந்த மாசி மக உற்சவத்தை முன்னிட்டு கீழ் புவனகிரி ஸ்ரீநன்னைய ராமானுஜர் கூடம் நிர்வாகிகள் மற்றும் ஆலய தரிசன அறக்கட்டளையினர் அனைத்து ஏற்பாடுகளையும் சீரிய முறையில் செய்திருந்தனர்.

Click here to read this article – Abirami Andhdhi – Thirukadaiyur

Leave a Reply

Your email address will not be published.