சஷ்டி விரதம் Sasthti Viratham

அன்பார்ந்த நேயர்களே, மாதம்தோறும் சஷ்டி விரதம் இருக்கும்  சஷ்டி விரதம் இருக்கும் அன்பர்கள் வீட்டிலிருந்தபடியே முருகனை எப்படி எல்லாம் வழிபடலாம் ? முருகப்பெருமானுக்கு எந்த எந்த மந்திரங்களைச் சொல்லி இந்த சஷ்டி விரதத்தை  கடைபிடிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் நாம் காணப்போகிறோம்.

 ஒவ்வொரு மாதமும் வரும் மாதாந்திர சஷ்டியின் போதும் இந்த மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் நீங்கள் சொல்லி  அந்த முருகப்பெருமானை  நீங்கள் பூஜிக்கலாம்.

அன்பர்கள் அதிகாலை ஆறு மணிக்குள் நீராடிவிட்டு அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பால் மற்றும் பழத்தை சாப்பிடலாம் . உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வேளை உணவும் மற்ற நேரங்களில் பாலும்-பழமும் சாப்பிடலாம்  

முருகனுக்குரிய மந்திரங்கள் ஆன ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்ற மந்திரங்களை நாள் முழுவதும் ஜெபித்து வரலாம் அன்று காலையிலும் மாலையிலும் சிறப்பான முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளை செய்யலாம் .

பூஜையின் பொழுது முருகப் பெருமானை பூஜை செய்வதற்கு இதோ எளிமையான தமிழ் போற்றி மந்திரங்கள் வரிகளுடன் உங்களுக்காக தொகுத்து கொடுத்துள்ளோம்.

 இதோ என்னுடன் சேர்ந்து நீங்களும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

விரதம் இருக்கும் பக்தர்கள் அன்று அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யலாம் அப்படி கோயிலுக்கு செல்ல முடியாத அன்பர்கள் வீட்டிலிருந்தபடியே ஒரு நிவேதனம் செய்து படைத்து முருகப் பெருமானை நினைத்து போற்றி இந்த விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் .

கந்தசஷ்டி கவச பாடல்

வந்தருள் புரிவாய் கந்தநல் வேளே

வரமதைத் தருக வந்தருள்புரிக

தவமுடை நாளில் கந்தனை வணங்கி

சஞ்சலம் கழிந்து சதிராய் வாழ

இன்பசு கங்களை அள்ளி வழங்கிடும்

இனிய நல்முருகன் எங்களின் துணைவன்

துன்பங்கள் துடைத்து தூய நல்வாழ்வை

கந்தன்அருள சஷ்டிநல் விரதம்

அறுதின விரதம் சஷ்டி விரதம்

ஐப்பசி பிரதமை நன்னாள் தொடங்கி

ஆறாம் திதியது சஷ்டி நல்நாளில்

அமையும் சூரசம் ஹார நிகழ்வும்

குழந்தை வரமும் குடும்ப நல்பொருளும்

கொடுப்பான் கந்தன் குறைவின்றித் தருவான்

கருவறை பலம்பெறும் கந்தன்அருளால்

கடும் தோஷங்களும் விலகியே செல்லும்

வணிகத்தில் லாபம் உயரும் உயரும்

பதவிகள் பலவும் கிடைக்கும் கிடைக்கும்

துணிவுடன் தொட்ட செயல்கள் துலங்கும்

தூயவன்அருளால் தொட்டது விளங்கும்

கனிவுள்ள முருகன் காட்சியைத் தருவான்

அமைதி நல்வாழ்வை அமைந்திட வருவான்

பெறும் சுகம் ஆயிரம் பெறலாம் பெறலாம்

வரும் துயர் அனைத்திலும் விடுதலை பெறலாம்

சஷ்டியில் விரதம் சஞ்சலம் நீக்கும்

சஷ்டியில் விரதம் சகலமும் அளிக்கும்

சஷ்டியில் விரதம் கேட்டது கிடைக்கும்

சஷ்டியில் விரதம் நினைத்தது பலிக்கும்

கந்தா போற்றி கடம்பா போற்றி

கார்த்திகைச் செல்வா போற்றி போற்றி

முருகா போற்றி முதல்வா போற்றி

சிவனார் மைந்தா சிவசிவ போற்றி

வேலா போற்றி சூரா போற்றி

வெற்றியைத் தரும்கூர் வேலும் போற்றி

மயிலும் போற்றி சேவலும் போற்றி

மயூரநாயக மலர்ப்பதம் போற்றி

வள்ளியை விரும்பும் நாயக போற்றி

தெய்வ யானையின் தேவா போற்றி

திருமால் மருகா அழகா போற்றி

சிவபார்வதி யின்மைந்தா போற்றி

கணபதி நாதனின் தம்பியே போற்றி

குணங்களில் கடலே குமரா போற்றி

அறுபடை வீட்டில் அமர்ந்தாய் போற்றி

அற்புதன் முருகனின் திருவடி போற்றி

போற்றி போற்றி குமரா போற்றி

போற்றி போற்றி கந்தா போற்றி

போற்றி போற்றி கடம்பா போற்றி

போற்றி போற்றி முருகா போற்றி

வேறு

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!

வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்

ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!

முருகா என்று ஓதுவார் முன்!

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த

கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு

தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

Leave a Reply

Your email address will not be published.