அனைத்து செல்வங்களையும் அளிக்கும் தை மாதம் அம்பிகையின் வழிபாடு

தை மாதம் என்றாலே தை அமாவாசை என்பது மிகச் சிறப்பான ஒரு விஷயம். தை அமாவாசை என்பது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. பொதுவாக தை அமாவாசைகளில் கடலில் நீராடுவது அல்லது ஆறுகளில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு விஷயம். அதுமட்டுமின்றி முன்னோர்கள் அதாவது நீத்தார் கடன் என்று சொல்லப்படுகின்ற முன்னோர்கள் வழிபாடு, முன்னோர்கள் தர்ப்பணம் கொடுக்கக்கூடிய நிகழ்வும் நடைபெறும்.

இது மட்டுமில்லாமல் அடுத்த முக்கியமான ஒரு சிறப்பு தை அமாவாசைக்கு என்பது அபிராமி அதாவது திருக்கடவூர் அபிராமி (Thirukkadaiyur abirami).

திருக்கடவூர் என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது அந்த மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவி வரம் அளித்த அமிர்தகடேஸ்வரர் ஆலயம் தான்(Swamy Amirthakadeswarar Temple).

அதாவது நம்முடைய தமிழ்நாட்டிலேயே ஆறு வகையான சமய வழிபாடு ஒருகாலத்தில் இருந்தது. அதில் சாக்த வழிபாடு (Sakta ) என்று சொல்லக்கூடிய ஒரு வழிபாட்டுமுறை முன்னர் இருந்தது. அதாவது அம்பிகையை வழங்கும் வழிபாடு என்பது தான் சாக்த வழிபாடு என்று சொல்வார்கள். அந்த சாக்த வழிபாடு செய்தவர் திருக்கடவூரில் பட்டர் குடும்பத்தை சேர்ந்த சுப்பிரமணிய ஐயர்(Subramaniya iyer).

சுப்பிரமணிய ஐயர் அவர் ஒரு வித்யா உபாசகர். அவருக்கு ஆதி முதல் அந்தம் அதாவது எல்லாமே அம்பிகை தான். அப்பேர்பட்ட அந்த அம்பிகை பக்தரான சுப்ரமண்ய அய்யரிடம் அந்த அம்பிகையே விளையாடிய திருவிளையாடல் நடைபெற்ற நாள் இந்த தை அமாவாசை.

நமக்கு வாழ்விலே என்னென்ன செல்வங்கள் எல்லாம் தேவையோ அத்தனை செல்வங்களும் நாம் பெறுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய அந்த மகா மந்திரமாகிய அபிராமி அந்தாதியை (Abirami anthathi) நமக்கெல்லாம் அளித்தவர் அந்த அபிராமி பட்டர் (Abirami pattar). அப்பேர்ப்பட்ட உயர்ந்த மகாகவி ஆகிய அந்த அபிராமி பட்டரிடம் அம்பிகை நடத்திய திருவிளையாடல் நடந்த நாள் தான் இந்த தை அமாவாசை நாள்.

அப்படி என்ன திருவிளையாடல் என்றால் தை அமாவாசை அன்று எல்லோருமே முன்னோர்களை வழிபடுவது என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விஷயம்.

தை அமாவாசை அன்று காவிரிப்பூம்பட்டினத்தில் ஸ்நானம் செய்து முன்னோர்கள் வழிபாடு செய்வதற்காக முதலாம் சரபோஜி மன்னர்(king Saraboji) காவிரிப்பூம்பட்டினத்தை நோக்கி வந்திருந்தார். முதலாம் சரபோஜி மன்னர் ஆனவர் அப்பொழுது தஞ்சாவூரை(Tanjore) ஆட்சி செய்து வந்தவர்.

இந்த பித்ரு கடன்களை செய்வதற்காக தன்னுடைய பரிவாரங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு வந்தவர் அந்த கடன்களை எல்லாம் முடித்து விட்டு அருகில் இருக்கும் அமிர்தகடேஸ்வரர் (Thirukadaiyur amirthakadeswarar temple) கோயிலுக்கு சென்று அங்கே அம்பாளையும் ஈஸ்வரனையும் தரிசித்துவிட்டு செல்லலாம் என்ற முடிவோடு அந்த கோயிலை நோக்கி புறப்பட்டார்.

வழக்கம்போல் அன்று சுப்பிரமணிய ஐயர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். மன்னனுடைய மிகப்பெரிய பரிவாரங்கள் அங்கே வந்ததையோ, அவரை கடந்து செல்வதையோ அவர் கவனிக்கவில்லை. அங்கிருந்த மக்களெல்லாம் மன்னரைக் கண்டு உடனடியாக எல்லோரும் கூடி வந்து மன்னரை வணங்கி நின்றனர்.

ஆனால் அபிராமிபட்டர் மட்டும் எந்த ஒரு அசைவும் இல்லாமல் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். இவரைக் கண்ட மன்னர் தன்னை கண்டு எல்லோரும் எழுந்து நின்று மரியாதையோடு இருக்கும்பொழுது இவர் மட்டும் தன்னை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருப்பதை கண்டு சற்று வியந்தார்.

அருகில் இருந்தவர்களிடம் இவர் யார் என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவர் ஒரு பைத்தியம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபாடு கிடையாது. எப்பொழுதுமே ஏதோ இப்படி தியானத்திலேயே உட்கார்ந்திருப்பது போல் சித்தம் பிடிப்பது போல் உட்கார்ந்து இருப்பார். அவருடைய நித்திய கடமைகளை கூட சில சமயம் செய்யாமலே இப்படி பித்து பிடித்தது போல் அமர்ந்திருப்பார் என்றெல்லாம் பல்வேறு குற்றங்களை அவர் மேல் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை ஏனென்றால் மன்னர் அவரிடம் ஏதோ ஒரு ஒளி தெரிவதை கவனித்தார். சரி, அவருடைய உள்ளுணர்வை சோதித்துப் பார்க்கலாம் என்று நினைத்த சரபோஜி மன்னர் பட்டரின் அருகில் சென்று ஐயா இன்று என்ன திதி என்று தங்களுக்கு தெரியுமா என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்த அபிராமிபட்டர் மன்னர் என்ன கேள்வி கேட்கிறார் என்பதை கவனிக்காமல் ஏதோ ஒரு நினைப்பில் இன்று நிறைந்த பௌர்ணமி என்று பதில் சொல்லிவிட்டார்.

சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் சிரித்து விட்டார்கள். சிரித்துவிட்டு நாங்கள் தான் அப்பொழுதே சொன்னோமே இவர் ஒரு சித்தம் தெளிவு இல்லாதவர்` என்று ஊர் மக்கள் எல்லாம் மன்னரை நோக்கி கூறிவிட்டு நகைத்தார்கள்.

சிறிது நேரம் தியானத்தில் இருந்து கண்விழித்த அபிராமிபட்டர் தன் முன்னால் மன்னர் நிற்பதையும், அவருக்குப் பின்னால் பரிவாரங்கள் எல்லாம் சூழ்ந்து நிற்பதையும் கண்டு ஒரு நிமிடம் திகைத்தார். ஐயோ இப்படி மன்னர் வந்ததும் தெரியாமல், இந்த பரிவாரங்கள் எல்லாம் வந்தது கூட தெரியாமல் நாம் தியானத்தில் இருந்து விட்டோமே இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டப்பட்டு எழுந்தார்.

அப்பொழுது சரபோஜி மன்னர், “என்ன பட்டரே இன்று என்ன திதி என்று கூடவா தங்களுக்கு தெரியவில்லை” என்று கேள்வி கேட்டார்.

அப்போதுதான் அபிராமி பட்டர் தன்னுடைய சுய நினைவுக்கு வந்து அய்யோ தான் ஏதோ ஒரு பெரிய தவறை செய்து விட்டோம் என நினைத்து சிறிது நேரம் யோசித்தார். மன்னர் ஏதோ நம்மிடையே கேள்வி கேட்டிருக்கிறார் நாம் ஏதோ ஒரு பதில் சொல்லி இருக்கிறோம் என்று யோசித்து விட்டு இன்று நிறைந்த அமாவாசை திதியை போய் நாம் நிறைந்த பௌர்ணமி என்று சொல்லிவிட்டோமே  என்று நினைத்து மிகவும் கவலை அடைந்தார்.

உடனே அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நேராக அம்பாள் சன்னதிக்கு சென்று, “அம்பிகையே என்ன இப்படி ஒரு காரியத்தை என்னை செய்ய வைத்துவிட்டாய். நிறைந்த அமாவாசை அன்று நிறைந்த பௌர்ணமி என்று என்னுடைய வாயாலேயே சொல்ல வைத்து விட்டாயே” என்று சொல்லிவிட்டு நேராக ஒரு பெரிய நெருப்பு குழியை ஏற்படுத்தி விட்டு அதற்கு மேல் அமர்ந்து கொண்டார்.

அம்பிகையை பார்த்து நான் சொன்னது உண்மைதான் என்று நிரூபித்து எப்படியாவது என்னை நீ தான் காத்தருள வேண்டும். நான் ஒன்றிலிருந்து நூறு பாடல்களை வரைக்கும் பாடுவேன் அதற்குள் நான் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபித்து எனக்கு நீ காட்சி அளிக்காவிட்டால் இந்த நெருப்பு குழியிலேயே என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சபதம் செய்தார்.

அப்படி அவர் பாடிய பாடல்தான்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென் கடிக் குங்கும   தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையே

Uthikkindra sengathir ucchi thilakam unarvudaiyor

Mathikkindra maanikkam maadhulam podhu malarkkamalai

Thudhikkindra minkodi menkadi kumkuma thoyamenna

Vidhikkindra meni abiraami endhan vizhi thunaiyae

அதாவது அபிராமி என்றாலே வெளிச்சம், ஒளி. தியானத்திலே அந்த அபிராமியே நினைத்துக் கொண்டிருந்ததால் அந்த ஒளியாகிய வெளிச்சமாகிய அபிராமியே தன்னுடைய கண்களுக்கு தெரிந்ததால்தான் அவருக்கு இருட்டு என்பதே தெரியவில்லை.

இவருடைய மனதிற்குள்ளே சாட்சாத் அந்த நிறை நிலவாகிய அந்த அன்னையை அவர் கண்டதால் தான், சாட்சாத் ஒளி வடிவமாகிய அந்த அம்பாளே கண்டதால் தான் அவருடைய மனதிற்கு அது பவுர்ணமி என்று தோன்றியது. அப்படி இருக்கையில் அவர் அமாவாசை என்று எப்படி குறிப்பிடுவார்.

இன்னும் தொடர்ந்து பாடுகிறார்.

இப்படியெல்லாம் அவர் அம்பிகையை நினைத்து பாட இறுதியில் அம்பிகை தன்னுடைய காதில் இருக்கின்ற தாடங்கம் என்று சொல்லக்கூடிய அணிகலனை விட்டு எரிய அங்கே முழு நிலவாக பிரகாசம் எழுகின்றது. அங்கே வானில் பவுர்ணமி நிலவு தக தக என்று மின்னி ஜொலிக்கின்றது.

பித்தன் என்று அவரை நினைத்தவர்களுக்கு எல்லாம் அவர் எப்பேர்ப்பட்ட பக்தன் என்பது அப்பொழுதுதான் புரிகின்றது. இவர் முக்தன் அல்லவா. இவரைப் போய் தவறாக நினைத்து விட்டோமே என்று கவலையுற்ற மன்னன் அதற்கு பிறகு அவருக்கு பல மானியங்களை கொடுத்து அவரை பெருமைப்படுத்துகின்றான்.

Thirukadaiyur temple Gopuram view

அவர் அப்பொழுது அந்த அம்பிகையை நோக்கி பாடிய அந்த 100 பாடல்கள் தான் அபிராமி அந்தாதி (Abirami andhadhi).

அத்தகைய பெருமை வாய்ந்த அந்த அபிராமி அம்பிகையை இந்த தை அமாவாசை அன்று வீட்டில் விளக்கேற்றி வைத்து அந்த அம்பிகையை நினைத்து இந்த ஒரு பாடலை சொன்னாலும் போதும் அனைத்து செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா

மனம்தரும்; தெய்வ வடிவுந் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா

இனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே

கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

Dhanam tharum kalvi tharum orunaalum thalarvariyaa

manam tharum dheiva vadivum tharum nenjil vanjamilla

inam tharum nallana ellam tharum anbar enbavarkkae

ganam tharum poonguzhalaal abirami kadaikkangalae

அந்த அற்புதமான ஒளி வீசுகின்ற அந்த அபிராமியின் உடைய கடைக்கண்களை நாம் பூஜித்தால் நமக்கு எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த தை அமாவாசையில் அந்த திருக்கடவூர் அபிராமி நினைத்து இந்த அற்புதமான பாடலை வழங்கிய அபிராமி பட்டரையும் நினைத்து மாலையில் விளக்கேற்றி வைத்து இந்த பாடலை பாட நாம் எல்லா செல்வங்களும் பெற்று இன்புறலாம்.

Leave a Reply

Your email address will not be published.