Shall I get Government Job? அரசுப்பணி கிடைக்குமா? Astrology Q&A

“ஆலய தரிசனம்” வழங்கும் ஜோதிட கேள்வி பதில்  
வயிற்று வலி. ஆபரேஷன் மூலம் தீருமா?
Stomach pain – will it Cleared with Operation or Natural Way?
கேள்வி: ஐயா, எனக்குப்  பல நாட்களாக வயிற்று வலி. இந்த வயிற்று வலி, ஆபரேஷன் மூலம் தீருமா? ஆபரேஷன் அவசியமா? டாக்டர்கள் ஆபரேஷன் செய்து ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வு என்ன?

பதில்: உங்கள் ஜாதகம் விருச்சிக லக்னம், கடக ராசி. லக்னத்தில் சுக்கிரனும் சனியும் இணைந்திருக்கிறார்கள். ஆறாம் இடத்தில் கேது இருக்கின்றார். பதினோராம் பாவத்தில் கன்னியில் செவ்வாயும் குருவும் இணைந்திருக்கிறார்கள். 12 ஆம் பாவத்தில் சூரியன், புதன், ராகு.

இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.

வயிற்றைக் குறிக்கக்  கூடிய இடம் ஆறாம் பாவம். அந்த ஆறாம் பாவத்தில் கேது அமர்ந்திருக்கிறார். வீடு கொடுத்த செவ்வாய் பதினோராம் பாவத்தில் கன்னியில் அமர்ந்திருக்கிறார். உடல் காரகனான சந்திரன் ஒன்பதாம் பாவத்தில் ஆட்சியில்  அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பானது. உயர்ந்த பதவியைக்  கொடுக்கக் கூடியது. அவர் மூன்றாம் பாவத்தைப்  பார்ப்பதால் எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கும். நடப்பு திசை சந்திர திசை என்பதால் பெரிய அளவில் உடல்ரீதியான ஆபத்தைத்  தரமாட்டார்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஆறுக்குடைய செவ்வாய் பதினோராம் பாவத்தில் பகை பெற்று தனது எட்டாம் பார்வையால் ரோக ஸ்தானத்தில் உள்ள கேதுவைப்  பார்ப்பதும், அந்த பாவத்தை அஷ்டமாதிபதி புதன் ராகுவோடு இணைந்து பார்ப்பதும் சில தவிர்க்கமுடியாத சங்கடங்களைத்  தரும்.

செவ்வாய்க்கு வீடு கொடுத்த புதன் விரயம் ஏறியதும், அவரோடு ராகு மற்றும் சுக்கிரன் இருப்பதும், உடல் உபாதைகளை உறுதிசெய்கின்றன. சந்திர தசை ஆட்சிபெற்று நடந்தாலும், அது ஸ்திர லக்னமான  விருச்சிகத் திற்குப்  பாதக ஸ்தானம் என்பதால், பாதகாதிபதி  ஆட்சிபெற்று நிலை என்பதால், சந்திர திசை பல நல்ல விஷயங்களைச்  செய்தாலும், இப்படிச் சில சங்கடங்களையும் ஏற்படுத்துவார். ஆனால் அதற்காக அச்சப்பட வேண்டியதில்லை. ஆபரேஷன் நல்ல முறையில் நடந்து சரியாகும்.

அரசுப்பணி கிடைக்குமா?
அரசு பணி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
கேள்வி: ஐயா, நான் பல வருடங்களாக அரசு பணிக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அரசுப்பணி கிடைக்குமா? அரசு பணி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

பதில்: மீன லக்னம் இரண்டாம் இடத்தில் சூரியன் .மூன்றாம் இடத்தில் சுக்கிரன். புதன், கேது. 6-ஆம் இடத்தில். குரு. ஒன்பதாமிடத்தில் ராகு, சந்திரன் மற்றும் சனி பதினோராம் இடத்தில் செவ்வாய்.

இனி உங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருவோம்.

அரசுப் பணி கிடைக்க முதலில் முயற்சி செய்ய வேண்டும். அதற்கான அரசாங்க தேர்வுகளை முறையாகப் படித்து எழுத வேண்டும். ஜாதக ரீதியாக பலவீனமாக இருந்தாலும் கூட, முயற்சியின் மூலமாக , சற்று காலதாமதம் ஆனாலும் கூட, ஏதோ ஒரு நல்ல நேரத்தில் அரசுப் பணியில் சேர்ந்து விட முடியும். ஆகையினால் ஜாதகம் சரியில்லை; அதனால் அரசு பணிக்கு போகவில்லை என்று நாமாக நினைத்துக் கொண்டு முயற்சி செய்யாமல் இருப்பது  சரியல்ல.

ஜாதகரீதியாக பலன்களைப் பார்ப்போம் .

அரசு பணிக்கு முதலில் உத்தியோக ஸ்தானமான ஆறாம் இடமும், ஜீவன ஸ்தானமான பத்தாம் இடமும் வலுப்பெற வேண்டும். சூரியன் முதலிய அரசு கோள்கள் நலம் பெற வேண்டும். உங்கள் ஜாதகத்தில் உத்யோக ஸ்தானத்தைக்  குறிக்கும் சிம்ம ராசிக்கு உரிய சூரியன் தனஸ்தானத்தில் உச்ச பலத்தோடு இருக்கிறார். உத்தியோக ஸ்தானத்தில் அமர்ந்த குரு லக்னாதிபதியாகி ஒன்பதாம் பார்வையாக ஆறாமாதி சூரியனைப்  பார்க் கிறார். சூரியன் அமர்ந்த வீடு செவ்வாயின் வீடு. செவ்வாய் லாப ஸ்தானமான மகரத்தில் உச்ச பலத்தோடு இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும், உத்யோக ஸ்தானமான 6-ஆம் இடத்தையும், அதில் அமர்ந்துள்ள லக்னாதிபதி குருவையும் பார்க்கிறார். இதைவிட சிறப்பு வேற என்ன வேண்டும்? எனவே நிச்சயம் அரசுப்பணி, அதுவும் நல்ல நிலையில் கிடைப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் உங்கள் ஜாதகத்தில் இருக்கின்றன. எனவே கவலைப்படாமல் முயற்சி செய்யவும்.நிச்சயம் கிடைக்கும்.

கல்வி எப்படி இருக்கும்? Astrology related to Education
எதிர்காலத்தில் பெரிய படிப்பு படிப்பானா?
Shall I Learn My post graduate Higher Studies in future ?
கேள்வி: ஐயா என் மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன் படிப்பு  சரியாக வரவில்லை இவருடைய கல்வி எப்படி இருக்கும்? எதிர் காலத்தில் பெரிய படிப்பு படிப்பானா ? என் மகன் பெரிய படிப்பு படிக்க வேண்டும் பெரிய உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசைப்படுகின்றேன். நடக்குமா? நல்வாக்கு அருள வேண்டுகின்றேன்.

 பதில்: உங்கள் ஜாதகம் கடக லக்னம். இரண்டில் கேது, மூன்றில் சனி, ஐந்தில் சூரியன், ஆறில் சுக்கிரன், புதன் ஏழாம் இடமான மகரத்தில் சந்திரனும் செவ்வாயும், எட்டாம் இடத்தில் ராகு குரு. படிப்பது என்பது கிரகிக்கும் திறனைப் பொறுத்தது .ஆர்வத்தை பொறுத்தது .ஒருவனுக்கு கிரகிக்கும் திறன் இல்லை என்று சொன்னால் , இன்றைய கல்வி நிலையில், அவன் நாம் எதிர்பார்க்கக்கூடிய கல்வியில் வளர்ச்சி அடைவது கடினம்.

அதற்கு முயற்சியும் பயிற்சியும் மிக அதிகமாகத்  தேவைப்படும். கல்வி வளர்ச்சிக்குத்  துணை புரிவது மனோ காரகனான சந்திரன் புத்தி காரக னான புதன். இவர்களுக்குத் துணையாக, பாதகம் செய்யாத அளவில், மற்ற கிரகங்கள் இருக்க வேண்டும். ஒரு ஜாதகத்தின் துவக்க நிலைப் படிப்பை இரண்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் கொண்டும்,கல்லூரிப் படிப்பை 4-ஆம் இடத்தில் இருந்தும், ஆராய்ச்சிப் படிப்பை 9ஆம் இடத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாகது  நான்காம் இடம். சுக ஸ்தானத்தையும் வாகன ஸ்தானத்தையும் கல்வியையும் தாயார் நிலையையும் குறிப்பது நான்காம் இடம். உங்கள் ஜாதகத்தில் நான்காம் இடத்துக்குரிய சுக்கிரனோடு சேர்ந்து புதன் ஆறாம் இடத்தில் மறைந்து விட்டார். இது ஜாதக ரீதியான பின்னடைவைக்  காட்டுகிறது. கடக லக்கினத்திற்கு பதினோராம் ஆதிபத்தியம் சுக்கிரனுக்கு வருவதால் பாதகாதிபதி பெற்ற சுக்கிரனோடு புதன் இணைந்து இருப்பது அவ்வளவு சரியான அமைப்பு அல்ல.

அடுத்து இந்த புதன் நான்காவது ராசிக்கான கல்வி ராசிக்கு 12-ம் இடமான விரயத்தையும் லக்ன ராசிக்கு 12ஆம் இடமான மிதுனத்தையும் கொண்டது. ஆக கல்விக்குரிய இடத்தோடு  இரண்டு விதங்களிலும் ஆதிபத்தியம் பெற்ற புதன் அமைப்பு  கல்வியில் கவனமின்மையையும், ஆர்வமின்மை யையும், கல்வி கற்கக்கூடிய குடும்ப சூழல் இல்லாததையும் காட்டுகிறது. எனவே படிப்பதில் சிரமம் இருக்கும். இவர்கள் இணைந்த வீட்டுக்குரிய குரு லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில்  பகை பெற்று ராகுவோடு இணைந்து இருப்பது மற்றும் ஒரு பின்னடைவு. அந்த குருவின் பார்வை 4-ஆம் இடத்திற்கு விழவில்லை.

அடுத்து இந்த சுக்கிரனும் புதனும் இணைந்து லக்ன விரயத்தைத்  தான் பார்க்கிறார்கள். நாலாம் பாவத்துக்கு உரிய சுக்கிரனும் புதனும் தனுசு ராசியில் கேதுவின் மூல நட்சத்திரத்தில் நிற்கிறார்கள். அந்த மூல நட்சத்திர கேது  நான்காம் பாவத்திற்கு பாதகாதிபதி பாவமான   பதினொன்றாம் பாவத்தில், அதாவது லக்னத்திற்கு இரண்டில் நிற்கிறது .இதுவும் ஒரு எதிர்மறையான விஷயம். அடுத்து தசாநாதன் ஆயில்ய நட்சத்திரம் என்பதால் ஆரம்ப நிலை புதன் தசை. புதனுடைய நிலை கல்விக்கு எதிர்மறையாகவே இருக்கிறது. அடுத்து வரக்கூடிய கேதுதிசை. அதுவும் எதிர்மறையாகவே இருக்கிறது. சுக்கிர தசையும் கல்விக்கு எதிர்மறையாகவே இருக்கும். ஒருவருக்கு சரியான திசைகள் முப்பத் தைந்து வயது வரை படிப்பதற்கு சாதகமாக அமையவில்லை என்று சொன் னால் , அவர்  மனம் எப்படி படிப்பில் சிறப்பாக ஈடுபடும்? இவையெல் லாம் ஜாதக ரீதியான பின்னடைவுகள். நிலைமை படிப்பில் ஆர்வம் இல்லை என்பதை அப்படியே பிரதி பலிக்கின்றன. ஆனால் முயற்சி திருவினையாக்கும். சற்று அதிக கவனம் எடுத்துக் கொண்டு மிகுந்த உழைப்போடு படித்தால் ,ஓரளவு இந்நிலையை கடந்துவிடலாம். அதற்கு தெய்வ அனுகூலமும் தேவை

வேலைக்குச் செல்லலாமா? சொந்தத் தொழிலா?
Shall I go with Job or any Business ? Solution from Astrology
கேள்வி: ஐயா என்னுடைய ஜாதகத்தில் எதிர்காலம் எப்படி இருக்கிறது. வேலைக்குச் செல்லலாமா? சொந்தத் தொழிலா?

பதில்: கும்ப லக்கினம். இரண்டில் சனி, சந்திரன், ராகு. ஐந்தாம் இடத்தில் சூரியன், புதன், செவ்வாய். ஆறில் சுக்கிரன். ஏழாம் இடத்தில் குரு. எட்டாம் இடத்தில் கேது. இனி உங்கள் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். சுக ஸ்தான அதிபதி மற்றும் பாக்யாதிபதி சுக்கிரன் தனித்து அமர்ந்திருக்கிறார். பகை பெற்று அமர்ந்திருக்கிறார்.  ஆறாம் வீட்டுக்குரிய சந்திரன், லக்னத்திற்கு இரண்டில் லக்ன விரையாதிபதி சனியோடும்  ராகுவோடும் அமர்ந்திருக்கிறார். ஜீவத் தானாதிபதி செவ்வாய்  ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற புதன் மற்றும் 7ஆம் ஆதி சூரியனோடு அமர்ந்திருக்கிறார். தன லாபாதிபதி ஏழில் அமர்ந்து லக்னத்தை பார்ப்பது திருமணத்திற்குப் பின்  பொருளாதார வளத்தைக்  காட்டுகின்ற அமைப்பாக இருக்கிறது. ஜீவன காரகன் சனி உத்யோக ஸ்தான அதிபதி சந்திரனுடன் ராகுவோடு இரண்டில் அமர்ந்திருக்கிறார். ஆறாம் வீடும் சந்திரனும் சற்று குறைபாடுடனே இருக்கிறார்கள் என்பதால் அதிக முயற்சிக்கு பின்னே அரசாங்க வேலையை பெற முடியும். இதிலே சாதகமான அமைப்பு ஐந்தில் சூரியனும் புதனும் இருப்பது. எனவே முயற்சி செய்தால் முடியலாம்.

திருமணம் நிச்சயம் உண்டு.சனி பரிகாரம் தேவை.
why my Marriage is getting Delayed ? Reason from your Horoscope – Astrology
கேள்வி :என்னுடைய திருமணம் ஏன் தாமதமாகிறது? எத்தனை இடத்தில் பெண் தேடினாலும் சரியாக அமைய மாட்டேன் என்கிறது. என்ன காரணம்? தோஷ பரிகாரம் செய்ய வேண்டுமா?

பதில்:கடக லக்னம் லக்னத்தில் குரு உச்சபலம். இரண்டில் சனி. மூன்றில் ராகு. நான்கில் சுக்கிரன் ஆட்சிபெற்று வக்கிரம் அடைந்து உள்ளார். கூட சூரியன். ஐந்தாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி. கூட புதன் .பாக்கியஸ்தானத்தில் கேதுவும் சந்திரனும் இணைந்திருக்கிறார்கள் .இனி பலனை ஆராய்வோம்.

பொதுவாகவே எல்லா ஜோதிட நூல்களிலும் அழுத்தமாக கூறுகின்ற விடயம் கடக சிம்ம லக்னகாரர்களுக்கு 7ஆம் இடம் 8ஆம் இடம் ஆதி பத்தியம் பெற்ற  சனியால் திருமணம் தாமதமாகிறது. அப்படி காலத்தில் ஆனாலும்   ஏதேனும் ஒருவிதத்தில் அது வில்லங்கம் செய்கின்றது. திருமண வாழ்க்கையை சுமுகமாக நடத்த விடுவதில்லை.

இதைப்போலவே நான்கு கேந்திரங்கள் ஆன தனுசு, மீனம், மிதுன, கன்னி லக்னக்காரர்களுக்கு அவ்வளவு எளிதாக திருமணம் ஆவதற்கு இல்லை. பார்த்து செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் தனுசு மீன லக்ன காரர்களுக்கு லக்னாதிபதி கேந்திர பலம் பெற்றுவிட்டால் திருமண தாமதம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. தனுசு லக்னத்திற்கு ஆறாம் இடமான ரிஷபம் பகை வீடாக மாறுவதாலும் சுக்கிரன் பகை கிரகமாக இருப்பதாலும்  அதைப்போலவே மீன லக்கினத்திற்கு சுக்கிரன் 3 8க்கு அதிபதி ஆவதாலும், திருமண தாமதம் ஆகிறது. மிதுன கன்னி லக்கினகளுக்கு  வேறு மாதிரி தொல்லை. பாதகஸ்தானம் ஆகிறது களத்ரஸ்தானம்.

இந்த ஜாதகத்தில் 7 8 க்கு உரிய சனி குடும்ப ஸ்தானத்தில் பகை பெற்று அமர்ந்திருக்கிறார். களத்திரகாரகனான சுக்கிரன்  ஆட்சி பெற்று அமர்ந்து இருந்தாலும் வக்கிரகதியில் அமர்ந்திருக்கின்றார். அவரை சனியும் பார்க்கிறார். லக்னாதிபதியான சந்திரன் குரு வீட்டில் அதுவும் பாக்கியஸ்தானம் பெற்று அமர்ந்திருப்பதும் அந்த வீட்டுக்குரிய குரு லக்னத்தில் உச்ச பலத்தோடு பரிவர்த்தனை பெற்றிருப்பதும் அவர்களுக்குள் உள்ள நிலை திரிகோண நிலையாக இருப்பதும் இதில் உள்ள நேர்மறையான நிலை. இந்த நிலையே பல தோஷங்களை துடைத்துவிடும். குரு உச்ச பலம் பெற்று 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார் .சந்திரனையும் பார்க்கிறார். ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். எனவே இப்பொழுது இடைஞ்சலாக இருப்பது சனி மட்டுமே தனித்துச் செய்ய வேண்டிய தோஷத்தை தோஷ நிவர்த்தி செய்து விட்டால் மிக எளிதாக திருமணம் நடந்து விடும்.திருமணம் நிச்சயம் உண்டு.சனி பரிகாரம் தேவை.

Leave a Reply

Your email address will not be published.