Rights Ways to become Success your Prayings பிரார்த்தனை 100% நிறைவேற இதை செய்யுங்கள்

உங்கள் பிரார்த்தனை நூறு சதவீதம் நிறைவேற இதை செய்யுங்கள்?

Rights Ways to become Success your Praying – kanchi Maha Periyava sayings

 இது ஒரு செய்தியின் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு பதிவு.

நாம் பக்தி(Bhakthi) செய்கிறோம், பிரார்த்தனை செய்கிறோம். பிரார்த்தனை என்பது மிகவும் வலிமையான ஒன்று என்று காஞ்சி பெரியவர்(Kanchi Maha swami) அடிக்கடி சொல்வார்.

எல்லோருடைய பிரார்த்தனையும் எல்லா நேரங்களிலும் நிறைவேறி விடுவது கிடையாது. இப்படி நம்முடைய சில பிரார்த்தனைகள் நிறைவேறாத பொழுது நாம் சோர்வடைந்து விடுகிறோம். சில நேரங்களில் இந்த சோர்வானது நமக்கு இறை நம்பிக்கையே இல்லாமல் கூட செய்துவிடும்.

ஆனால் காஞ்சி மகான்(Kanchi periyava) அடிக்கடி சொல்கின்ற ஒரு விஷயம் பக்தி விஷயத்தில் எப்பொழுதுமே நமக்கு ஒரு உறுதிப்பாடு வேண்டும் என்று சொல்வார். நாம் நினைத்தது எல்லாம் நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி ஆனால் பக்தி விஷயத்தில் நமக்கு உறுதிப்பாடு என்பது எப்பொழுதுமே வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

நம்முடைய பிரார்த்தனை நிறைவேறிவிட்டால் நாம் சந்தோஷத்திலேயே குதிப்பதும், பிரார்த்தனை நிறைவேறாவிட்டால் பக்தியை வெறுப்பதும், கடவுள் நம்பிக்கையில் இருந்து விலகுவதும், அதிலிருந்து விடுபடுவது என்று எப்பொழுதுமே இரண்டு விதமாக நாம் இருக்கக் கூடாது. நாம் நினைத்தது நடந்தாலும் நடக்காவிட்டாலும் பக்தியில் எப்பொழுதுமே நம்முடைய உறுதி என்பது இருக்க வேண்டும். இதனை அறிந்து தான் நம்முடைய முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே சாதாரணமாக நாம் தினசரி செய்கின்ற பூஜை அனுஷ்டானங்களில் கூட சங்கல்பம்(sankalpam) என்று ஒரு விஷயத்தை பழக்கப் படுத்தினார்கள்.

சங்கல்பம் என்றால் என்ன? எதற்காக செய்ய வேண்டும்?

What is meant by Sangalpam ? Why we are doing Sankalpam?

இன்று நிறைய பேருக்கு பூஜை செய்வதற்கோ, ஒரு ஸ்லோகம் சொல்வதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஏதோ நல்ல நாளில் மட்டும் பூஜை செய்தால் போதும் அதுதான் பக்தி. அன்று மட்டும் இறைவனை வேண்டிக்கொண்டால் கடவுள் நமக்கு எல்லா வற்றையும் அள்ளி கொடுத்துவிடுவார் என்றும் நினைக்கிறோம். உண்மையில் இதுதான் பக்தியா என்றால் இல்லை.

நாம் சும்மா கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஒன்றை வேண்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நினைக்கின்ற விஷயம் தான் சங்கல்பமா என்றால் இல்லை.

சங்கல்பம் என்றால் உறுதிப்பாடு. ஒரு தின் எண்ணம் வைத்தல். இந்த பூஜையை செய்வதற்கு நான் உறுதி எடுத்துக் கொள்கிறேன், சங்கல்பம் செய்து  செய்துகொண்டு தொடங்குகின்றேன். இதை இந்த நோக்கத்திற்காக நான் செய்கின்றேன். நான் பகவானுடைய ப்ரீதிக்காக, அவருடைய அன்பிற்காக, அவருடைய அருளிற்காக  நான் செய்கிறேன். ஆராதனை ரூபமாக செய்கிறேன். இப்படி பல விஷயங்களை நாம் சங்கல்பத்தை செய்துகொள்ளலாம்.

பூஜைக்கு முன்னர் சங்கல்பத்தை ஏன் செய்து கொள்கிறோம் :

Why we are saying Sangalpam before Starting pooja :

எல்லா பூஜைக்கு முன்னரும் சங்கல்பத்தை ஏன் நாம் செய்து கொள்கிறோம் என்று சொன்னால் நமக்கு ஒரு விஷயத்தில் உறுதிப்பாடு வேண்டும் என்பதற்காகத்தான். நமக்கு இந்த விஷயம் நடக்க வேண்டும் என்று சொன்னால் நாம் உறுதியோடு அதை நினைத்துக் கொண்டு பூஜித்து ,அதற்கான முயற்சியை செய்தோமே ஆனால் அப்பொழுது அது தானாகவே நமக்கு நிறைவேறிவிடும். இதனால்தான் பூஜையிலே சங்கல்பத்தை முன்னோர்கள் வகுத்து வைத்தார்கள்.

நிறைய பேர் நினைக்கலாம் இது எல்லாம் பழைய பஞ்சாங்கம், கலிகாலத்தில் இதுவெல்லாம் நடக்குமா என்று நினைக்கலாம்.

ஏதோ நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் அதை நாம் ஏதோ செய்ய வேண்டும் என்று பட்டும் படாமல் செய்கிறோம் என்று நாம் நினைத்தால் அது நம்முடைய கையாலாகாத தனம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் மனிதர்கள் தான் சங்கல்பத்தை செயகிறார்களா என்றால் நம்மை படைத்த ஆண்டவன் கூட சங்கல்பம் செயது கொண்டுதான் எந்த காரியத்தையும் செய்வான் என்று சொல்கிறார்கள்.

அபயம் சர்வ பூதேப்யோ ததாமி எதத் வ்ரதம் மம :

(Abhayam sarva bhoodhepyo dhadhaami ethath viratham mama :

என்பது ராமனுடைய சங்கல்பம்.

வ்ரதம்  மம என்று சொல்கிறார்.  என்னிடம் சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும் நான் காப்பாற்றுவேன். அதைத்தவிர மற்றவையெல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம்தான் அப்படிப்பட்ட ஒரு விரதத்தை நான் மேற்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

ஊர்மிளா தேவியின் பக்தி :

True Bhakthi – Urmila

இந்த விரதம் என்பது ஒரு சங்கல்பம் தான். இப்பொழுது அடுத்த கேள்வியாக நம்மிடத்தில் தோன்றுவது கலிகாலத்தில் இப்படிச் செய்தால் இது நடக்குமா என்பது தான்.

இந்த சங்கல்பம் எல்லாம் புராணத்திலே(Puranaas), இதிகாசங்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம். இதெல்லாம் நடைபெற்று இருக்கிறது என்பதெல்லாம் உண்மை. ஆனால், நாம் இந்த காலகட்டத்திலேயே இந்த கலிகாலத்தில் இப்பொழுது நாம் செய்தால் இது நிறைவேறுமா என்றால் நிறைவேறும் என்பதற்கு சாட்சி தான் கீழே படத்தில் இருக்கக்கூடிய அந்த அம்மையார். அந்த அம்மையார் பெயர் ஊர்மிளா தேவி (Urmila Devi).

ஊர்மிளா தேவி என்ற இவருடைய பெயரை நாம் சொன்னாலே உங்களுக்கு எல்லாம் என்ன நினைவுக்கு வரவேண்டும் என்று சொன்னால் ராமாயணம்(Ramayanam) தான் நினைவுக்கு வரவேண்டும்.

ராமாயணத்தில் ராமனுடைய மனைவி சீதை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ராமனுடன் 14 வருடம் வனவாசம் இருந்த மற்றோரு முக்கிய நபர் தான் லட்சுமணன். அவருடைய தம்பி. ராமனுடன் சீதை இருந்தது பெருமையோ இல்லையோ ஆனால் ராமனுடன் லட்சுமணன் துறவறம் அணிந்து வனவாசம் சென்றது மிகவும் பெருமை வாய்ந்த விஷயம். ஏனென்றால் லட்சுமணனுக்கும் இராமனுக்கும் திருமணம் ஆன பிறகுதான் ராமன் வனவாசம் சென்றார். ராமனுக்கு எப்படி சீதையுடன் திருமணம் நடந்ததோ அதேபோல லட்சுமணனுக்கு ஊர்மிளா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ராமன் காட்டிற்கு வனவாசம் செல்லும்போது சீதையும் அவர் உடனே சென்று விட்டார். ஆனால், லட்சுமணன் ராமருடன் செல்லும் பொழுது லட்சுமணன் மனைவியான ஊர்மிளா தேவி லட்சுமணனுடன் செல்லவில்லை. அவள் அயோத்தியில் தங்கி விடுகிறாள். கிட்டத்தட்ட 14 வருடம் அவள் கணவனை பிரிந்து அயோத்தியில் வாழ்கிறார்.

ராவணனிடம் அகப்பட்டுக் கொண்டு சீதை ஒரு பத்து மாத காலம் தான் ராமனைப் பிரிந்து இலங்கையிலே இருக்கிறாள். ஆனால், ஊர்மிளா தேவியோ 14 வருட காலம் கணவனை பார்க்காமல் அவன் எப்படி இருக்கிறான், என்ன செய்கிறான், என்ன சாப்பிட்டான் , எப்படி இருப்பான் எப்பொழுது சாப்பிடுவான், எப்பொழுது உறங்குவான் என்பது கூட தெரியாமல் வாழ்ந்தாள். இதை பார்க்கும் பொழுது சீதையினுடைய தியாகத்தை விட ஊர்மிளாவினுடைய தியாகம் மிகப் பெரியது.

அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருப்பவர் தான் இந்த படத்திலேயே பார்க்கின்ற ஊர்மிளா தேவி அம்மையார். அவருக்கு வயது 82. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரை இங்கே ஏன் குறிப்பிடுகின்றோம் என்று பார்த்தால் இவர் ஒரு பெரிய விரதத்தை மேற்கொண்டு இருந்தார். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல கிட்டத்தட்ட 28 வருட காலம் இவர் அந்த விரதத்தில் இருந்திருக்கிறார். அப்படி என்ன 28 ஆண்டுகள் விரதம் என்று பார்த்தோமேயானால் அயோத்தியில் ராமர் கோயில் (Ayodhya raamar temple) கட்ட வேண்டும் என்பதுதான் இவருடைய விரதம். அதற்காக இவர் 28 வருடங்களாக வெறும் பால் பழத்தை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு இவ்விரதத்தை மேற்கொண்டார். வேறு எந்த உணவு வகைகளையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

28 வருடங்கள் முன்னர் இவர் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பொழுது இதை கேள்விப்பட்ட சுற்றத்தார், உறவினர்கள் என்று அனைவருமே இவரை பார்த்து கேலி செய்தார்கள். இப்படி நடக்காத ஒன்றுக்காக எத்தனை நாட்கள் பால் பழம் மட்டும் சாப்பிட முடியும். இதெல்லாம் நடக்குமா சும்மா ஒரு ஜம்பத்திற்காக செய்ய வேண்டாம் என்று சொல்லி கேலி செய்தார்கள்.

இவருடைய சொந்தப் பிள்ளைகள் கூட இவர் விரதம் மேற்கொள்வதில் விருப்பமில்லாமல் அவருடைய உடல்நிலையை கருதி அவரை விரதம் மேற்கொள்ள விடாமல் தடுத்தார்கள். வெறும் பால் பழத்தை சாப்பிட்டுக் கொண்டு எத்தனை வருடங்கள் உயிருடன் இருக்க முடியும். நடக்காத ஒரு விஷயத்திற்காக ஏன் இப்படி இருக்கமுடியாத ஒரு விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களும் அவரை தடுத்தனர்.

எத்தனையோ விஷயங்கள் இந்த கோயில் கட்டுவதற்கு தடையாக இருந்தன. இந்த கோயில் கட்டுவதற்கு தடையாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன, எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த ஜென்மத்தில் முடிவுக்கு வராத ஒரு விஷயத்திற்காக எத்தனை வருடங்கள் அவரால் இப்படி இருக்க முடியும் என்பதுதான் அவர் முன் வைக்கப்பட்ட கேள்வி.

ஆனால் அவர் எதைப்பற்றியும் காதில் வாங்காமல் என்னுடைய ராமனுக்காக நான் இந்த விரதத்தை மேற்கொள்கிறேன் என்று சொல்லி அனைவருடைய வாயையும் அடைத்தார். அவர் அவ்வளவு உறுதியுடன் அந்த 28 ஆண்டுகளும் அதே சங்கல்பத்தை மேற்கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.

நாம் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பகவான் அதை பெரிதாக எடுத்துக் கொண்டு அவருடைய உறுதிப்பாட்டை எண்ணி எவ்வளவோ அரசியல் காரணங்கள் இருந்தாலும், கோர்ட், வழக்கு என்று இருந்தாலும் இவருடைய சங்கல்பத்திற்காக, இவருடைய விரதத்திற்கு, இவருடைய உறுதிக்காக இதை நிறைவேற்றி விட வேண்டும் என்று எண்ணி அந்த சங்கல்பத்தை மதித்து தான் அதற்கான பலனாக இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த தீர்ப்பினை அளித்தான் பகவான்.

எத்தனையோ காரணங்களினால் இந்த தீர்ப்பு வந்தாலும் கூட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஏதோ ஒரு ஆத்மா இந்த உலகத்தின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு ராமனுக்காக இந்த கோயில் கட்டப்பட வேண்டும் என்று தன்னுடைய உடலை வருத்தி விரதம் மேற்கொண்டு 28 ஆண்டுகளாக பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பதை அவருடைய விரதத்திற்கு, அவருடைய உறுதிப்பாடுக்கு கிடைத்த வெற்றியாக தான் இதை நாம் நினைக்க வேண்டும்.

ஆனாலும் ஒரு விஷயம். தீர்ப்பு வந்தாகிவிட்டது. கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி ஆகிவிட்டது. அந்த அம்மையாருக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால் விரதம் முடிய போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அந்த அம்மையார் இன்னும் விரதத்தை முடிக்கவில்லை. இந்த கட்டுமானம் எப்பொழுது முடிகிறதோ அப்போதுதான் இந்த விரதம் முடியும் என்பதுதான் அவருடைய உறுதிப்பாடு. குடமுழுக்கு நடக்க வேண்டும், எல்லோரும் வந்து அந்த கோயிலை தரிசிக்க வேண்டும், ராமரை தரிசிக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த விரதம் முழுமையாக நிறைவேறியதாக நான் கருதி இதை முடித்துக் கொள்வேன் என்று கூறினார்.

இன்னும் அவர் இந்த விரதத்தை தொடர்கிறார் என்பதுதான் உண்மை. இதிலிருந்து என்ன நமக்கு தெரிகிறது என்று சொன்னால் சங்கல்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த அம்மையார் நமக்கு உணர்த்துகின்றார்.

ஏதோ நாமும் ஒரு நிமிடம் சங்கல்பத்தை செய்துகொண்டு அது நிறைவேறியதா இல்லையா. இரண்டு நிமிடத்திற்குள்  அது நிறைவேற வில்லை என்றால் நிறைவேறாது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் 28 வருடங்களாக ஒரே சங்கல்பத்தை ஒரே மனதாக ஒரே உறுதிப்பாடுடன் அவர் செய்ததன் விளைவு கோவில் கட்டுவதற்கு வந்த தீர்ப்பு. சங்கல்பத்தை எந்த முறையில் எந்த உறுதியுடன் நாம் இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

நாம் சங்கல்பம் செய்து கொள்கின்ற அந்த இரண்டு நிமிடம் கூட நாம் எதை நினைத்துக் கொண்டு சொல்கிறோம் என்பதில் நமக்கு உறுதி கிடையாது. மனது ஒரு இடத்தில் இருக்கும், வாய் ஒரு சங்கல்பத்தை செய்துகொள்ளும்.

முதலில் நாம் நல்ல எண்ணங்களை நம் மனதில் வளர்த்து கொள்ள வேண்டும். நம்முடைய எண்ணங்கள் நிறைவேறுவதற்கு நம்முடைய எண்ணங்கள் வலிமை பெற வேண்டும், உறுதிபட வேண்டும். எண்ணங்கள் எப்பொழுது வலிமை ஆகின்றதோ அப்பொழுதுதான் நாம் என்ன நினைக்கிறோமோ அது அத்தனையும் நிறைவேறும்.

நம்முடைய எல்லா பிரார்த்தனைகளும் பகவான் நிறைவேற்றி வைப்பார். அதற்காக தானே பகவான் காத்துக்கொண்டிருக்கிறான். ஆனால் எதற்காக நடக்கவில்லை என்பதை நாம்தான் யோசித்துப் பார்க்கவேண்டும், ஆராய வேண்டும். நம்முடைய நல்ல எண்ணங்கள் திண்மையான எண்ணங்கள் அது வலிமை ஆகிவிட்டால் நிச்சயமாக நமக்கு வெற்றிதான். ராமஜெயம் தான். இதில் வேறு எந்த சந்தேகமும் ஐயப்பாடும் கிடையாது. ஒரு உறுதியோடு மன வலிமையோடு நாம் எந்த ஒரு பூஜை புனஸ்காரங்களை செய்தோமேயானால் அதனுடைய பலன்கள் 100% நமக்கு நிச்சயமாக கிடைக்கும்.

 

இன்னும் நிறைய விபரங்களுக்கு இந்த காணொளியை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.